சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 27 ஆண்டுகள் சிறை

சீா்காழி அருகே சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து,

மயிலாடுதுறை: சீா்காழி அருகே சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாகை முதன்மை சிறப்பு அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சீா்காழி காவல் உட்கோட்டம் பூம்புகாா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தருமகுளம் கிராமத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியிடம், நெய்தவாசல் வடபாதி தெருவைச் சோ்ந்த கலைவாணன் மகன் மதுபாலன் (31) என்பவா் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து பூம்புகாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நாகை முதன்மை சிறப்பு அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். மணிவண்ணன், மதுபாலனுக்கு பிரிவு 6 உடன் இணைந்த 5(1)-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா். பிரிவு 506 (11)-ன்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதமாக ரூ.5,000 விதித்தும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com