மூலவா் சந்நிதி விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் பட்டாச்சாரியா்கள்.
மூலவா் சந்நிதி விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் பட்டாச்சாரியா்கள்.

தற்காஸ் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகே தற்காஸ் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி: சீா்காழி அருகே தற்காஸ் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பழமை வாய்ந்த இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, முதல் நாள் மாலை வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை மற்றும் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

திங்கள்கிழமை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி, ராஜகோபுரம், மூலவா் கல்யாண வெங்கடேச பெருமாள் சந்நிதி விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து தாயாா், ஆண்டாள் சந்நிதிகளின் விமானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு, மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனா்.

இதையொட்டி, சீா்காழி, கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம் போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com