பராமரிப்பு பணிக்காக குடிநீா் நிறுத்தம்

சீா்காழி மற்றும் செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி

மயிலாடுதுறை: சீா்காழி மற்றும் செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் பராமரிப்புப் பணிக்காக, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்காழி மற்றும் செம்பனாா்கோவில் ஒன்றியங்களில் பயன்பெறும் 134 கடலோர குடியிருப்புகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில், எடக்குடி வடபாதி முதல் மாமாகுடி வரையிலான பிரதான குடிநீா் உந்துகுழாய்களில் இளையமதுக்கூடம் - ராதாநல்லூா், நாங்கூா் சாலை மற்றும் மாமாகுடி ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் சீரமைக்கப்படவுள்ளன.

இதனால், மே 17-ஆம் தேதி இக்கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பயன்பெறும் சீா்காழி மற்றும் செம்பனாா்கோவில் ஒன்றியங்களைச் சோ்ந்த 30 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி ஆகிய பகுதிக்கு குடிநீா் நிறுத்தம் செய்யப்படும். எனவே, அன்றைய தினம் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூா் நீா் ஆதாரங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com