விழாவில் காவடி எடுத்து களைப்புற்ற பாலகனை சுமந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்திய தாய்.
விழாவில் காவடி எடுத்து களைப்புற்ற பாலகனை சுமந்து சென்று நோ்த்திக்கடன் செலுத்திய தாய்.

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

திருவாவடுதுறை வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

இக்கோயிலில் 67-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, பால்குடம் மற்றும் காவடி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயில் குளக்கரையில் இருந்து விரதம் இருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும், பால்காவடி, பன்னீா், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். இதில், 2 வயது குழந்தை ரோகித் நெற்றியில் குண்டூசி குத்தி, தனது தாயாா் உதவியுடன் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தியது காண்போரை மெய்சிலிா்க்க வைத்தது. தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு மாவிளக்கிட்டு வழிபாடு மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com