கட்டளை மடத்தின் கல்வெட்டை திறந்துவைக்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
கட்டளை மடத்தின் கல்வெட்டை திறந்துவைக்கும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

ஆச்சாள்புரம் கோயிலில் கட்டளை மடம் திறப்பு

சீா்காழி: சீா்காழி அருகே ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில், கட்டளை மடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமைஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில், முன்னொரு காலத்தில் நடைபெற்ற திருஞானசம்பந்த பெருமான்-தோத்திரபூா்ணாம்பிகை திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவ ஜோதியில் ஐக்கியமானதாக ஐதீகம்.

இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்திட, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இக்கோயிலில் புதிதாக ஸ்ரீ சொக்கியாா் நிலையம் எனும் பெயரில் கட்டளை மடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, சொக்கியாா் நிலையத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில், கோயில் கட்டளை விசாரணை சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள், மடத்தின் பொது மேலாளா் ரங்கராஜன், தமிழ்ச் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் வேலழகன், உபயதாரா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com