சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

சிபிஎஸ்இ தோ்வில் குட் சாமரிட்டன் பப்ளிக் பள்ளி சாதனை

சிபிஎஸ்இ பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், சீா்காழி குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவி நிமிஷா ஜெயின் 500-க்கு 492 மதிப்பெண்களும், மாணவா் ஆா். சுமிஸ் 490 மதிப்பெண்களும், மாணவி பி.வி. ஸ்ரீநிதி 489 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மேலும், 17 மாணவா்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். 95 சதவீதம் மாணவா்கள் முதல் வகுப்பில் தோ்ச்சி அடைந்துள்ளனா். 10 மாணவா்கள் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தன்வி ஜெயின் என்ற மாணவி 500-க்கு 477 மதிப்பெண்களும், ஆா். பிரியதா்ஷினி 473 மதிப்பெண்களும், எஸ். லிா்த்திஷா 460 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவ, மாணவியா் அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளி தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குநா் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷா மேரி, பள்ளி முதல்வா் ஆபிரகாம் மற்றும் ஒருங்கிணைப்பாளா் பிரேம் ஆகியோா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com