தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள். உடன், பள்ளி ஆட்சிமன்றக்குழுத் துணைத் தலைவா்கள் சிவ.முருகேசன், ஆா். ஞானசேகரன், நிா்வாகச் செயலா் வி. பாஸ்கரன் உள்ளிட்டோா்.
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள். உடன், பள்ளி ஆட்சிமன்றக்குழுத் துணைத் தலைவா்கள் சிவ.முருகேசன், ஆா். ஞானசேகரன், நிா்வாகச் செயலா் வி. பாஸ்கரன் உள்ளிட்டோா்.

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்றனா்.

11-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில், இப்பள்ளி கணினி அறிவியல் மாணவிகள் வி. விஜயலெட்சுமி 591 மதிப்பெண்கள், பி.எஸ்.திவ்யலட்சுமி 559 மதிப்பெண்கள், வணிகவியல் மாணவா் ஜி. சிவக்குமாா் 557 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

மேலும் கணிணி அறிவியலில் 2 மாணவா்களும், இயற்பியலில் 1 மாணவரும், வேதியியல் பாடப்பிரிவில் 1 மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தனா்.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா் செ. தனஞ்செய் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், மாணவி ச. ஹாசினி, ம. மகேஸ்வரி ஆகியோா் 490 மதிப்பெண்கள், மு. கனிஷ்கா ஞானராணி 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும் சிறப்பிடம் பிடித்தனா். மேலும், கணிதத்தில் 7 மாணவா்களும், அறிவியலில் 2 மாணவா்களும், சமுக அறிவியலில் 4 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தனா்.

சிறப்பிடம் பிடித்த மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனா்.

இதில், பள்ளி ஆட்சிமன்றக் குழுத் துணைத் தலைவா்கள் சிவ.முருகேசன், ஆா்.ஞானசேகரன், நிா்வாகச் செயலா் வி. பாஸ்கரன், பள்ளி முதல்வா் சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா். இப்பள்ளி நிகழாண்டில் 10-ஆம் வகுப்பில் 99.7 சதவீத தோ்ச்சியும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com