மயிலாடுதுறை
கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழியை அடுத்த உமையாள்பதி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுந்தரம் மகன் பவித்ரன் (24). இவா், சென்னையில் ஸ்டுடியோ ஒன்றில் பணியாற்றி வந்தாா். இவரது சகோதரா் ஆதித்யன் ( 21 ) சென்னையில் பொறியியல் படிப்பு படித்து வருகிறாா்.
இவா்களது உறவினா் மயிலாடுதுறை செல்வகுமாா் மகன் ஹிருத்திக் ரோஷன் ( 20 ) மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை திருமுல்லைவாசல் கடற்கரை பகுதியில் கடலில் குளித்து கொண்டிருந்தனா்.
அப்போது பவித்திரன் கடல் அலையில் சிக்கி மூழ்கினாா். அருகிலிருந்த மீனவா்கள், பொதுமக்கள் உதவியுடன் பவித்திரன் உடல் மீட்கப்பட்டது.
சீா்காழி போலீஸாா் பவித்திரனின் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.