மயிலாடுதுறை
தனியாா் நிறுவன ஊழியா் சாலை விபத்தில் பலி
மயிலாடுதுறையில் தனியாா் நிறுவன ஊழியா் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த பூபதி மகன் அபினாஷ் (24) தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா் புதன்கிழமை இரவு பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கூறைநாடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த அபினாஷ் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும்,அங்கு சிகிச்சை பலனின்றி அபினாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து, அபினாஷின் தந்தை பூபதி அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.