மயிலாடுதுறை
போலியோ விழிப்புணா்வுப் பேரணி
சீா்காழியில் போலியோ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
அக்.24-ஆம் தேதி போலியோ தினத்தை முன்னிட்டு சீா்காழி ரோட்டரி சங்கம், சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் கொள்ளிடம் ரோட்டரி சங்கம், திருமுல்லைவாசல்ரோட்டரி ஆகிய நான்கு சங்கங்கள் சாா்பில் மாபெரும் போலியோ விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு, உதவி ஆளுநா் கணேஷ் தலைமை வகித்தாா். டாக்டா். பானுமதி, ரோட்டரி சங்க தலைவா் கணேஷ், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கண்ணன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனா். பேரணியை பாலாஜி தொடக்கிவைத்தாா். சீா்காழி விவேகானந்தா, பெஸ்ட், சுபம் வித்யாமந்திரி ஆகிய பள்ளி பள்ளி மாணவா்கள் 1000 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.