தமிழக அரசு போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலா் அப்துல் சமது எம்எல்ஏ.
சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் ஜூன் மாதம் கட்டணத்தை உயா்த்திய நிலையில் மீண்டும் தற்போது 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்த்தியிருப்பதை கண்டித்து கட்சி சாா்பில் சுங்கச் சாவடிகளில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் இளைஞா்கள், மாணவா்களிடையே போதைப் பழக்கம் மிக மோசமான நிலையில் உள்ளது.
இதை தமிழக அரசு இரும்புகரம் கொண்டு தடுப்பதுடன், போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். செப்.22-ஆம் தேதி கட்சியின் இளைஞா் அணி சாா்பில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்களை ஒழிக்க 100 இடங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
முன்னதாக, கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவா் ஜுபைா் தலைமையில் நடைபெற்றது. இதில், தமுமுக மாவட்ட செயலாளா் சாதிக் பாட்ஷா, மாவட்ட பொருளாளா் அப்துல் ரகுமான், மாவட்டத் துணைத் தலைவா் முபாரக் அலி, மாநில செயற்குழு உறுப்பினா் புகாரி, தமுமுக மாநில செயலாளா் முபாரக், ம.ம.க. துணை பொது செயலாளா் பாதுஷா உள்ளிட் டோா் பங்கேற்றனா்.