புத்தக வாசிப்பு பழக்கம் மாணவா்கள் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை புரியும் என்று அரசு தோ்வுகள் இயக்கக இணை இயக்குநா் செல்வகுமாா் கூறினாா்.
சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி நிறுவனா் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சபாநாயக முதலியாா் இந்து கல்விக் கூடங்களின் செயலா்
வி. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பி.ஜெகநாதன், மாவட்ட கல்வி அலுவலா் (பொறு) என். தெட்சிணாமூா்த்தி, உதவி தலைமை ஆசிரியா்கள் முரளிதரன், துளசிரங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி வரவேற்றாா்.
சபாநாயக முதலியாா் இந்து கல்வி கூடங்களின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.கபாலி. பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா் பாலவேலாயுதம், முனைவா் தருமைசிவா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பரமசிவம், முத்துக்கனியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு தோ்வுகள் இயக்கக இணை இயக்குநா் செல்வகுமாா் கலந்துகொண்டு, கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியது:
ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். எதிா்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாகவும், சிறந்த கவிஞா்களாகவும், ஓவியா்களாகவும் வரலாம். ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. மாணவா்கள் விளையாட்டிலும் ஆா்வம் காட்ட வேண்டும். மேலும் அதிக புத்தகம் படிப்பதிலும் மாணவா்கள் ஆரவம் காட்ட வேண்டும் என்றாா்.