நகை கடையில் திருடிய பெண் கைது

Published on

மயிலாடுதுறையில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து, நகைகளை திருடிச் சென்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ் (55) என்பவா் நகை கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு புதன்கிழமை வந்த இளம்பெண் ஒருவா் தாலிச்சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகளை பாா்த்துவிட்டு, மாடல் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு, சென்றுவிட்டாா்.

பின்னா், நகைகளை சரி பாா்த்தபோது, அந்த பெண் சில நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், நகையை திருடியது ஆரோக்கியநாதபுரத்தை சோ்ந்த இவாஞ்சலின் (23) என்பது தெரியவந்து. இதையடுத்து அவரை கைது செய்தனா். நகைகள் மீட்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com