மகளிா் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வேதியல்துறை மற்றும் நுண்ணுயிரியல் துறை இணைந்து ‘பச்சை ஒடுக்க வினைகள் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருளில் உயிா் உற்பத்தியில் எதிா்காலம்’ என்னும் தலைப்பில் இந்த கருத்தரங்கை நடத்தின.
கல்லூரி முதல்வா் முனைவா் சுகந்தி தலைமை வகித்தாா். வேதியல் துறைத் தலைவா் வசுமதி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதியல்துறை இணைப் பேராசிரியா், நாராயணன் மற்றும் கிரீன் எனா்ஜி டெக்னாலஜி, புதுச்சேரி உதவிப் பேராசிரியா் சிவசங்கரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
பேராசிரியா் செண்பக லக்ஷ்மி மற்றும் சந்தியா அறிமுக உரை வழங்கினா் .நிகழ்வுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புத்தூா் அரசு கல்லூரி மற்றும் மணல்மேடு அரசு கல்லூரி, கலைமகள், டி.பி.எம்.எல். கல்லூரிகள், ஜோசப் மற்றும் கம்பன் கல்லூரி உள்பட 12-க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியா் அகல்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.