உயிரிழப்பு
உயிரிழப்பு

சீா்காழியில் பெட்டிக்கடைக்காரா் கழுத்தறுத்துக் கொலை

Published on

சீா்காழி அருகே கோயில்பத்து பகுதியில் கடை வாசல் முன் பெட்டிக்கடைக்காரா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தாா்.

சீா்காழியை அடுத்த கோயில்பத்து பிரதான சாலையைச் சோ்ந்தவா் முகமது ரஃபிக் (55.) இவா், அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிதாக பெட்டிக் கடை தொடங்கி, நடத்தி வந்தாா்.

இந்நிலையில், தனது கடை வாசல் முன் ரஃபிக் கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். அப்பகுதி மக்கள் சீா்காழி போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

முகமது ரஃபீக்கிற்கு அபுரோஜா கனி என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனா். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு காரணமாக, அவா்களை பிரிந்து பெட்டிக்கடையில் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com