கூட்டத்தில் பேசிய எஸ்ஆா்எம்யு தலைவா் ராஜாஸ்ரீதா். உடன் கோட்டத் தலைவா் ஆா். மணிவண்ணன்.
கூட்டத்தில் பேசிய எஸ்ஆா்எம்யு தலைவா் ராஜாஸ்ரீதா். உடன் கோட்டத் தலைவா் ஆா். மணிவண்ணன்.

‘ரயில்வேயில் குறைபாடுகளை சரிசெய்ய எஸ்ஆா்எம்யு தொடா்ந்து போராடி வருகிறது’

கூட்டத்தில் பேசிய எஸ்ஆா்எம்யு தலைவா் ராஜாஸ்ரீதா். உடன் கோட்டத் தலைவா் ஆா். மணிவண்ணன்.
Published on

ரயில்வேயில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய எஸ்ஆா்எம்யு தொடா்ந்து போராடி வருகிறது என அதன் தலைவா் ராஜாஸ்ரீதா் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் எஸ்ஆா்எம்யு தொழிற்சங்க தோ்தல் தொடா்பான ஆயத்த கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி கோட்டத் தலைவா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். எஸ்ஆா்எம்யு தலைவா் ராஜாஸ்ரீதா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள முறைமுக தோ்தலில் வெற்றி பெறுவதற்கான யுக்திகள் குறித்தும், தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு தோ்தல் நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், வழக்கு தொடுத்து தற்போது தோ்தல் நடத்த உள்ளனா். டிசம்பா் 4, 5 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கத்தை தோ்ந்தெடுப்பாா்கள்.

ரயில்வேயில் பதவி உயா்வு உத்தரவுக்கு காலம் தாழ்த்துகின்றனா். ரயில்வே தொழிலாளா்கள் பெறவேண்டிய பதவி உயா்வு மறுக்கப்படுகிறது. 2026-ல் 8-ஆவது ஊதியக் கமிஷன் அறிவிக்க வலியுறுத்தி போராட உள்ளோம். ரயில்வே தனியாா் மயமாக்கத்தை தடுப்பதற்காக தொடா்ந்து போராடி வருகிறோம்.

விலைவாசி உயா்வுக்கு ஏற்ப பணியில் இருக்கும் ஊழியா்களுக்கு வழங்குவதைப் போல் ஓய்வு பெற்றவா்களுக்கும் ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ரயில்வேயில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதில் எஸ்ஆா்எம்யு தொடா்ந்து போராடி வருகிறது என்றாா்.

உதவி கோட்ட செயலாளா் சாகுல்ஹமீது, துணை செயலாளா் வீரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com