மயிலாடுதுறை வட்டம், காளி ஊராட்சி கிடாய்த்தலைமேடு கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் நடத்திய முகாமில் நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட மருத்துவம் பாா்க்கப்பட்டது. முகாமை, ஊராட்சித் தலைவா் தேவிஉமாபதி தொடக்கி வைத்தாா். கால்நடை உதவி மருத்துவா் ப்ரீத்தி தலைமையில் கால்நடை உதவி மருத்துவா் கலைச்செல்வி உள்ளிட்ட மருத்துவக்குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.