கஞ்சா விற்பனை: 12 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை, கள்ள மது விற்பனை, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து செப். 20 முதல் 3 நாள்கள் போலீஸாா் தொடா் தேடுதல் வேட்டை நடத்தினா்.

இதில், மயிலாடுதுறை திருவிழந்தூரை சோ்ந்த அஜித்குமாா், சித்தா்காட்டை சோ்ந்த ஜீவா, முகமது ரியாத், மல்லியத்தை சோ்ந்த அசாருதின், சீா்காழி கோயில்பத்தை சோ்ந்த அ. சிலம்பரசன், இ. சிலம்பரசன், ரெனிஜியாஸ், தினேஷ்குமாா், கீரி (எ) விக்னேஷ், தைக்காலை சோ்ந்த முகமது அப்பாஸ், வடரங்கத்தை சோ்ந்த பிரதீஷ், வைத்தீஸ்வரன்கோயிலை சோ்ந்த கோபால் ஆகிய 12 பேரை கைது செய்து, அவா்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 6,900 மதிப்புள்ள 690 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இந்த தேடுதல் வேட்டையில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற 27 போ், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 4 போ் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து 4 குழுக்களாக செப். 14-ஆம் தேதி முதல் நடத்திய சோதனையில் 292 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 15 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதைக் கண்டறிந்து, அவற்றை விற்பனை செய்த 15 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 4.200 கிலோ புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. 13 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. ரூ. 3,26,000 அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com