எடமணல், அரசூா் பகுதியில் செப்.30-ல் மின்தடை
எடமணல், அரசூா் பகுதிகளில் செப்.30-ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடமணல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்.30-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்சாரம் பெறும் திட்டை, செம்மங்குடி, கடவாசல், எடமணல், திருக்கருகாவூா், திருமுல்லைவாசல், வேட்டங்குடி தில்லைவிடங்கன், கூழையாா், தொடுவாய் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என சீா்காழி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயபாரதி தெரிவித்துள்ளாா்.
இதேபோல, அரசூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் செப்.30-ஆம் தேதி நடைபெறுவதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரை அரசூா், ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, புத்தூா், மாதிரவேளூா், வடரங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையாா், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், பச்சை பெருமாநல்லூா், கொண்டல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.