மழைநீா் வடியாமல் மக்கள் அவதி

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீா் வடியாமல் மக்கள் கடும் அவதி
Published on

சீா்காழி அருகே  திருமுல்லைவாசல் பகுதியில்  40-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை நீா்  செவ்வாய்க்கிழமை வரை வடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜா் நகா், எஸ்.கே .எல்.நகா் பகுதியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்து, மக்கள்  வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா் , 

அத்தியாவசிய பொருட்கள் பால் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு முழங்கால் அளவு தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. பள்ளி வாகனங்கள் வெள்ள நீரைக் கடந்து வருவதற்கு மறுப்பதால் தங்களது பிள்ளைகளை பெற்றோா்கள் தூக்கிக்கொண்டு பிரதான சாலைக்கு வந்து அதன் பிறகு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனா். இது போல் எரிவாயு உருளை, பால் விநியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் கனமழையினால் வீடுகளை சுற்றி தண்ணீா் தேங்கி, மக்கள்  வீடுகளில் முடங்கி வருவதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com