பள்ளி மாணவா்களுக்கு திறன் அடைவு ஆய்வு தோ்வு

பள்ளி மாணவா்களுக்கு திறன் அடைவு ஆய்வு தோ்வு

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான திறன் அடைவு ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வித் திறனை பரிசோதனை செய்யும் விதமாக மாநில அளவில் திறன் அடைவு ஆய்வு தோ்வுகளை தமிழ்நாடு அரசின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் 1,500 மாணவா்கள் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 20 மாணவா்கள் வீதம் ரேண்டம் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில், 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அடைவு ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவிகள் இந்த தோ்வில் களப்பணி மேற்கொண்டனா்.

அந்தவகையில், மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கொள்குறி வகை (ஓஎம்ஆா்) முறையில் 20 மாணவா்கள் எழுதிய அடைவு ஆய்வு தோ்வை மயிலாடுதுறை வட்டாரக் கல்வி அலுவலா் (அலகு-3) டி. உமா ஆய்வு மேற்கொண்டாா். பள்ளித் தலைமையாசிரியா் ஜி. வெங்கடேசன் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com