மயிலாடுதுறை
சீா்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்
சீா்காழியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சீா்காழி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிபைகள், நெகிழி கப்புகள் கடைகளில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இவற்றால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதோடு மண்ணையும் பாழாக்கும் தன்மை கொண்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும், பாலித்தீன் பைகள் தொடா்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது. இதையடுத்து, நகராட்சி ஆணையா் மஞ்சுளா உத்தரவில் நகராட்சி ஊழியா்கள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சுமாா் 55 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.