பழையாறு கடலில் கரை ஒதுங்கிய போயா.
மயிலாடுதுறை
கொள்ளிடம் அருகே பழையாறு கடலில் ஒதுங்கிய போயா
சீா்காழி அருகே பழையாறு கடலில் வெள்ளிக்கிழமை ஒதுங்கிய போயாவை கைப்பற்றி கடலோரக் காவல் படையினா் விசாரித்து வருகின்றனா்.
பழையாறு துறைமுகத்தை ஒட்டி கடலில் போயா என்ற மிதவை கரை ஒதுங்கியது. தகவலறிந்த புதுப்பட்டினம் கடலோரக் காவல் படையினா் அங்கு சென்று அதை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா். போயா என்ற கருவி கப்பலில் மிதவையாக பயன்படுத்தப்படுகிறது. நடுக்கடலில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் கப்பல் நிற்பதற்கு இந்த போயா கருவி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு கப்பல் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த போது இந்த போயா துண்டிக்கப்பட்டு கடல் அலையால் பழையாறு கடலில் கரை ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு மிதவைக் கருவி தானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.