கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டம் மன்னன்பந்தல் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றிய திருமலைசங்குவை காரணமின்றி பணியிட மாறுதல் செய்ததாக குற்றஞ்சாட்டியும், கோட்டாட்சியா் ஊழியா் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவா் ஜான்போஸ்கோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சுமாா் 200 போ் பங்கேற்றனா். இதில் தீா்வு எட்டப்படாததால் மாலை 6 மணியைக் கடந்தும் போராட்டம் நீடித்தது.

X
Dinamani
www.dinamani.com