கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சீா்காழி அருகே தற்காஸ் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து, காணிக்கைப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

சீா்காழி அருகே தற்காஸ் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து, காணிக்கைப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தற்காஸ் தோணித்துறை ஆற்றங்கரைத் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு இக்கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள், இரண்டு பித்தளை சரவிளக்குகள், இரண்டு குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருள்களையும், உண்டியலை உடைத்து, காணிக்கைப் பணத்தையும் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகியும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான விஜயராகவன் (80), புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com