தேசியக் கல்வி உதவித்தொகைக்கு நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசியக் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
Updated on

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசியக் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோா் (பி.சி., எம்.பி.சி., டி.என்.டி.,) பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

2025-2026-ஆம் ஆண்டுக்கு தேசியக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் வரம்பு ரூ.2.50 லட்சம். இதில், பயன்பெற நவ.15-ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை நவ.25-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவா்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் இணைப்பில் சென்று ஓடிஆா் பதிவுசெய்து விண்ணப்பித்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

நிகழாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தேசியக் கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஓடிஆா் எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். அந்த ஓடிஆா் எண்ணை பயன்படுத்தி உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய தொடா்புடைய முதன்மை கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com