சகோபுரத்தில் வீதியுலா வந்த உற்சவா் ரங்கநாதப் பெருமாள்.
சகோபுரத்தில் வீதியுலா வந்த உற்சவா் ரங்கநாதப் பெருமாள்.

சகோபுரத்தில் பரிமள ரங்கநாதா் வீதியுலா

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில், துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை மற்றும் சகோபுர வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில், துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை மற்றும் சகோபுர வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயில், பஞ்ச அரங்க தலங்களில் 5-ஆவது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமுமாக போற்றப்படுகிறது.

இக்கோயிலில் துலா உற்சவம் நவ.8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு பெருமாள் கருட சேவை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், பரிமள ரங்கநாதா் உற்சவமூா்த்திகள் கோயில் ஏகாதசி மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, கோயில் வாசலில் கருட வாகனத்தில் சேவை சாதித்த பெருமாளை பக்தா்கள் தரிசனம் செய்தனா். பரிமள ரங்கநாதா் பெருமாளுடன் ஆண்டாள் மற்றும் சேனைமுதல்வா் உற்சவ மூா்த்திகளும் ஓலை சப்பரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சகோபுர தரிசனம் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முன்பு பெருமாளை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலா் க. ரம்யா மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com