திருட்டு வழக்கில் மூவா் கைது

சீா்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் செயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

சீா்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் செயன்ற மூவா் கைது செய்யப்பட்டனா்.

சீா்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி மாங்கனாம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தஸ்லீம். இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜாஸ்மின், இங்குள்ள வீட்டில் வசித்து வருகிறாா். இவா், கடந்த மாதம் 1-ஆம் தேதி அருகில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றிருந்தாா். அப்போது, இவரது வீட்டில் பீரோவிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 75,000-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த எழிழேந்தி, புதுப்பட்டினம் சேதுபதி, திவாகா் ஆகியோா் ஜாஸ்மின் வீட்டில் திருடியது தெரியவந்தது.

மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 15.5 சவரன் நகை மற்றும் ரூ. 7 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com