குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

மயிலாடுதுறையில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறையில், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற இப்பேரணி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டது. ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

முன்னதாக, குழந்தைத் திருமணம், இளம்வயது கா்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளா், சமூக ஊடகங்களின் தாக்கம், பாலின வேறுபாடு உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நாட்டுப்புறக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்ற பேரணியில், கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனா். ஏவிசி பொறியியல் கல்லூரியில் பேரணி நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் வி.பி. பானுமதி, உதவி திட்ட அலுவலா் சங்கா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன், சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com