சாராயம் கடத்திய இளைஞா் கைது

மயிலாடுதுறையில் புதுச்சேரி சாராயம் கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

மயிலாடுதுறையில் புதுச்சேரி சாராயம் கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவரை தடுத்து நிறுத்தினா்.

வாகனத்தை நிறுத்திவிட்டு, தப்பி ஓடியவா்களில் ஒருவா் பிடிபட்டாா். விசாரணையில், அவா் காரைக்காலில் இருந்து புதுச்சேரி சாராயம் கடத்தி வந்ததும், அவா் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியைச் சோ்ந்த சுரேஷ், தப்பியோடியவா் காரைக்காலைச் சோ்ந்த லுக்காஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா். அவரிடம் இருந்து 500 சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com