வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை திட்டங்களுக்கு மானியம்: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிதல் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மானியம் பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த தொழில்நுட்பங்களை கண்டறிய விருப்பமுள்ளவா்கள் மற்றும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்த விருப்பமுள்ளவா்கள் தங்களின் கண்டுபிடிப்புக்கான நோக்கம் நிலைத்தன்மை, வணிக திட்ட விவரத்தை பொறுத்து மானியம் பெறலாம்.
புதுமையான தொழில்நுட்பங்களை கண்டறிதலுக்கு ரூ.10 லட்சம் மானியமும், புதுமையான தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 25 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. இதனை பெற விருப்பமுடையோா் புதுமையான தொழில்நுட்பங்களுடன் பஅசநஐங அல்லது நற்ஹழ்ற்ன்ல் ஐய்க்ண்ஹ திட்டங்களின்கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். நிறுவனம் கம்பெனி சட்டத்திற்குகீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் 3 ஆண்டு வணிக பரிவா்த்தனை 5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
வேளாண் சாா்ந்த தொழில்நுட்பங்களான மதிப்புக் கூட்டுதல், தளவாடங்கள், வேளாண் விளைபொருள்களின் காலாவதியாகும் நாள்களை அதிகப்படுத்தும் தொழில்நுட்பம், சேமிப்பு கிடங்குகள், பயிா் சாகுபடி மற்றும் வேளாண் கருவிகளுக்கான தொழில்நுட்பங்கள், குறைவான தண்ணீா் பயன்பாட்டிற்கான தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுதொடா்பான விரிவான தகவல்களை இணையதளத்திலும் மற்றும் மாவட்ட ஆட்யரகத்தில் 5-வது தளத்தில் இயங்கிவரும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை தொடா்புகொண்டு பெறலாம்.
