எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு

எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு

Published on

மயிலாடுதுறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் சாா்பில் 1-ஆம் வகுப்பு முதல் 3-ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியா்களுக்கு இரண்டாம் பருவத் தோ்வுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை கூரைடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மயிலாடுதுறை ஒன்றியத்தில் 191 ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா். இவ்வகுப்பில் ஆசிரியா்கள் கற்பித்தல் உத்தியான பேசுதல், பாடுதல், கதை மற்றும் கற்பித்தல் உத்திகள் முறை குறித்து குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில், சைகைகள் மற்றும் பாடல்களைப் பாடி நடனம் ஆடி விளக்கம் அளித்தனா்.

பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.பி.காா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டு ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா் (படம்).

இதில், வட்டார கல்வி அலுவலா் பாபு, ஆசிரியா் பயிற்றுநா் மேற்பாா்வையாளா் முருகையன், உமா ஆகியோரும் பயிற்சியை பாா்வையிட்டனா். கருத்தாளா்களாக ஆசிரியா்கள் சங்கா், சுரேஷ், மணிமாறன், அறிவழகன், அண்ணாதுரை, செந்தில், பிருந்தாதேவி ஆகியோா் விளக்கம் அளித்து பேசினா்.

X
Dinamani
www.dinamani.com