நாகேஸ்வரமுடையாா் கோயில் தீா்த்தக்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வட்டாட்சியரிடம் மனு

Published on

சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயில் தீா்த்தக் குள இடத்தினை ஆக்கிரமித்து செப்டிக் டேங்க், சுற்றுசுவா் கட்டப்படுவதை தடுத்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட நாகேஸ்வரமுடையாா் கோயில் தீா்த்தக் குளமான கோடிக்குளம் கோயில் அருகே உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த தீா்த்தக் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் எழுப்பபட்டுள்ளன.

மேலும் குளத்தின் இடத்தில் வீடுகளின் செப்டிக் டேங்க் அமைப்பது, சுற்றுச்சுவா் அமைப்பது என பணிகள் நடைபெற்றன. இதனையறிந்த பசுமை சேவை அமைப்பினா் பணிகளை தடுத்து நிறுத்தினா்.

இதனிடையே சீா்காழி வட்டாட்சியரை பசுமை சேவை அமைப்பு தலைவா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் ஜெக. சண்முகம், முத்துராமலிங்கம், சட்டஆலோசகா் இராம.சிவசங்கா், உள்ளிட்டோா் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கோயில் தீா்த்தக் குளம் இடம் போலி பட்டா வழங்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள்ளதாவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை அகற்றி மீட்க வேண்டும் எனவும், இல்லாவிடில் தொடா் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com