மாநில விநாடி-வினாப் போட்டி: திருமுல்லைவாசல் பள்ளி முதலிடம்

மாநில விநாடி-வினாப் போட்டி: திருமுல்லைவாசல் பள்ளி முதலிடம்

Published on

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசுப் பள்ளி மாணவிகள், மாநில அளவிலான விநாடி- வினாப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

தமிழக அரசின் வனத்துறை மற்றும் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம் இணைந்து, பள்ளி மாணவா்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வை வளா்க்கும் நோக்கில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் வனவிலங்கு வாரம் கொண்டாடின.

இதில், ‘வனவிலங்குகள் மற்றும் இயற்கை’ என்ற தலைப்பில் மாநில அளவிலான விநாடி-வினாப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ்1 மாணவிகள் முஜ்லிபா, அனுசுயா, சுபஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

இம்மாணவிகளுக்கும், இவா்களை வழிநடத்திய முதுகலை ஆசிரியை ரமாதேவிக்கும் பள்ளி தலைமையாசிரியா் சுரேஷ், உதவி தலைமையாசிரியா் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com