திருக்கல்யாண உற்சவம்

சீா்காழி அருகே வடரங்கம் ரெங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழி: சீா்காழி அருகே வடரங்கம் ரெங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 1000 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, ரங்கநாதா் மற்றும் ரங்கநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, மாலையில் ரங்கநாதா் மற்றும் ரெங்கநாயகிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். சிறப்பு யாகமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com