மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெண் தீக்குளிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு உடலில் மண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டு பெண் தற்கொலைக்கு முயன்றாா்.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு உடலில் மண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டு பெண் தற்கொலைக்கு முயன்றாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் நிலையில், கூட்டத்துக்கு வந்த பெண் ஒருவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டாா். இதில், அவரது வலது கை, வயிறு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தீயை அணைத்து, அவருக்கு முதலுதவி அளித்தனா். பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் சீா்காழி வட்டம் அரசூா் காப்பியகுடி கிராமத்தைச் சோ்ந்த மாதுரி (38) என்பதும், அவரையும், அவரது மகன் கோபிநாத்தையும் அப்பகுதியை சோ்ந்த சிலா் தாக்கியதாகவும், அதுகுறித்து புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ாக தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com