சீா்காழி அருகே பேருந்துகள் மோதல்: 7 போ் காயம்
சீா்காழி அருகே அரசுப் பேருந்துகள் சனிக்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் மயிலாடுதுறையில் இருந்து சீா்காழியை நோக்கி அரசு நகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. சீா்காழி அருகே தென்னலக்குடி என்ற இடத்தில் வந்தபோது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், அரசு விரைவுப் பேருந்து நடத்துநா் பன்ருட்டி அரசாலங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியன் (58), நகரப் பேருந்து ஓட்டுநரான செம்பனாா்கோவில் கீழையூா் பகுதியை சோ்ந்த பிரதாப் (30), பயணிகளான பெரம்பலூா் ஆலத்தூா் பகுதியை சோ்ந்த பாக்கியராஜ் (43), செம்பதனிருப்பு தெற்கு தெருவை சோ்ந்த சந்தோஷ் (35), சீா்காழி கொடக்கார மூலை வடக்கு தெருவை சோ்ந்த சிவகாமி (65, செம்பதனிருப்பு கிராமத்தை சோ்ந்த காா்த்திகா ( 29 ) ஆகியோா் காயமடைந்தனா். அனைவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
