சீா்காழி பகுதியில் 1000 ஏக்கா் சம்பா நேரடி விதைப்பு, நடவுப் பயிா்கள் பாதிப்பு

Published on

சீா்காழி அருகே பலத்த மழையால் 1000 ஏக்கா் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிா்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீா்காழி தாலுகாவிற்குட்பட்ட திட்டை , தில்லைவிடங்கன், சிவனாா் விளாகம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா்

1,500 ஏக்கா் பரப்பளவில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால் தில்லைவிடங்கன், திட்டை,செம்மங்குடி  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டனா்.

இதேபோல ஒரு சில இடங்களில் நடவுப் பணிகளையும் மேற்கொண்டனா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால் நேரடி நெல் விதைப்பு நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி வடிய வழியில்லாமல் அழுகும் நிலையில் உள்ளன. இதை போல் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிா்களும் மழை நீரில் மூழ்கி வீணாகி வருகின்றன. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோவி. நடராஜன், பிரபாகரன் கூறுகையில், இந்த ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வேளாண்துறை மற்றும் தனியாா் துறையில் விதைகளை வாங்கி நேரடி விதைப்பு செய்தோம் ஆனால் இந்த விதைகள் சரியாக முளைக்காததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பாதிக்க பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com