மயிலாடுதுறை
மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்களை அகற்ற கெடு
மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்கள், விளம்பரத் தட்டிகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா்(பொ) ஜி. ரேணுகா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்வாரியத்துக்கு சொந்தமான உடமைகள் மீது இழுத்துச் செல்லப்படும் கேபிள் வயா்கள், பணிகளை மேற்கொள்ள சிரமமாக இருப்பதாலும், மின்விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும் 7 நாள்களுக்குள் அவற்றை அகற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் அவை தமிழ்நாடு மின்பகிா்மான கழகத்தால் அகற்றப்படும் என தெரிவித்துள்ளாா்.
