வைத்தீஸ்வரன்கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Published on

வைத்தீஸ்வரன்கோவிலில், தையல்நாயகிஅம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கின்றனா். புகழ்பெற்ற இக்கோயிலில் சூரசம்காரத்தின்போது சிவபெருமானிடம் முருகப்பெருமான் வேல் வாங்கி சம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு. அதன்படி, நிகழாண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. முன்னதாக வள்ளி தெய்வானை உடன் ஆகிய செல்வமுத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com