தனியாா் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்

சீா்காழி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

சீா்காழி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தை பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காழி அருகே திருமுல்லைவாசல் பிரதான சாலையில் வசித்த வந்த செல்வம் (65 ), தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 14-ஆம் தேதி சீா்காழிக்கு சென்று கொண்டிருந்தபோது, தனியாா் பேருந்து மோதியதில், செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். அவரது மனைவி செல்வமதி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து வியாழக்கிழமை இரவு திருமுல்லைவாசல் வந்தபோது அந்த பேருந்தை செல்வத்தின் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் திரண்டு, சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா் .

சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் சீா்காழி - திருமுல்லைவாசல் சாலையில் சுமாா் 30 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com