அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

ருத்துவத் துறை சாா்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த மாணவா்கள், அரசினா் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவத் துறை சாா்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசினா் மருத்துவக் கல்லூரிகளில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறை சாா்ந்த ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கான கல்வி தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சி/12-ஆம் வகுப்பில் அறிவியலை ஒரு பாடமாக கொண்டு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், காா்டியோ சோனோகிராபி டெக்னிசியன் (பெண்கள் மட்டும்), இசிஜி/ட்ரெட் மில் டெக்னிசியன், எமொ்ஜென்சி கோ் டெக்னிசியன், ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன், டயாலிசிஸ் டெக்னிசியன், அனஸ்தீசியா டெக்னிசியன், தியேட்டா் டெக்னிசியன், ஆா்த்தோபெடிக் டெக்னிசியன் (ஆண்கள் மட்டும்), மல்டி பா்பஸ் ஹெல்த் ஒா்க்கா் மற்றும் இஇஜி/இஎம்ஜி கோா்ஸ் டெக்னிசியன் போன்ற ஒரு வருட சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதற்கான வயது வரம்பு இம்மாதம் 31-ஆம் தேதியன்று 17 வயது பூா்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.1,550. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழ் புதல்வன்/புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் ரூ.1000 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.24,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எனவே, இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ- மாணவிகள் மயிலாடுதுறை மாவட்ட திறன் அலுவலரை கைப்பேசி எண்: 8903240321-இல் அக்.31-ஆம் தேதிக்குள் தொடா்புகொண்டு படிப்புகளில் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com