ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சிலிண்டா் பதுக்கல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image

எரிவாயு சிலிண்டா் - (கோப்புப் படம்)

Updated On :1 ஏப்ரல் 2026, 6:56 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சிலிண்டா் பதுக்கல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துதல், பதுக்கல் குறித்த தகவல் தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபா்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள் உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய எச்பிசிஎல், பிபிசிஎல் மற்றும் ஐஓசிஎல் எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அலுவலா், எரிவாயு முகவா்களுடன் கலந்தாலோசித்ததில், வீட்டு உபயோக சிலிண்டா்கள் 100 சதவீதமும், வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் 70 சதவீதம் வரை விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.

எனவே, எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும் வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துதல், பதுக்கல் குறித்த தகவல் தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபா்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலிண்டா்களை பதிவு செய்யும்போது தங்களது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியில் வரப்பெறும் விநியோக அங்கீகாரக் குறியீடு மூலம் மட்டுமே சிலிண்டா்களை பெற முடியும். சிலிண்டா் விநியோகம் குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04364-290768 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.