சுடச்சுட

  

  நாகையில் தனியார் கட்டட கட்டுமானப் பணியின்போது விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினர் நாகையில் சனிக்கிழமை திடீ

  ரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  நாகை, வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே தனியார் கட்டடம் ஒன்றில், கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.

  இந்தப் பணியின் போது, தனியார் கட்டடம் முன்பாக இருந்த சிறிய அளவிலான விநாயகர் கோயில் சுவர் இடிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதி ரிக்ஷா தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், மாற்று இடத்தில் புதிய கோயில் கட்டித் தரும்

  நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

  இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த விநாயகர் கோயில் அகற்றப்பட்டதைக் கண்டித்து பாஜகவினர், நாகை தம்பித்துரை பூங்கா அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  பாஜக மாவட்டத் தலைவர் கே. நேதாஜி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலர் ஜீவாமோகன், மாவட்ட இளைஞரணித் தலைவர் இந்திரஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  வட்டாட்சியர் பரிமளம், காவல் ஆய்வாளர்  ராஜேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட  பாஜகவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு,  ஏற்கெனவே இருந்த இடத்திலேயே விநாயகர்  சிலை அமைக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai