சுடச்சுட

  

  நீடாமங்கலத்தில் மனவளக்கலை மன்றத்தின் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

  விழாவுக்கு மன்றத்தின் நிர்வாக அறங்காவலர் ஏ. சண்முகம் தலைமை வகித்தார். திருவாரூர் மேற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கச் செயலர் பொன். கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.

  கொரடாச்சேரி கடல்வண்ணன், பிரேமா கடல்வண்ணன், நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் எம்.ஜி. சிங்காரவேலு, ஞானபூங்கோதை சிங்காரவேலு, டி. ராமலிங்கம், சுகந்தி ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு தம்பதியினராகக் கலந்து கொண்டனர். மனைவி நல வேட்பு விழாவை நடத்திவைத்து தஞ்சாவூர் பேராசிரியர்  அமுதா ராமானுஜம் சிறப்புரையாற்றினார்.

  விழாவில் பேராசிரியர்கள் எஸ்.கே. மூர்த்தி, ஜி. கண்ணையன், ஆசிரியர் கி. சேதுரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைத் தலைவர் ஜி. முருகானந்தம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ஒளிமதி  ஆர். சுவாமிநாதன் தவத்தை நடத்தி வைத்தார். பேராசிரியர் எஸ். நாகராஜன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai