சுடச்சுட

  

  மூதாட்டியைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறை

  By நாகப்பட்டினம்,  |   Published on : 01st September 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே  மூதாட்டியைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

  நாகை மாவட்டம், தரங்கம்பாடி, பெருமாள்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மனைவி மடத்தாச்சி (70). இவர், மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் தங்கியிருந்து கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.

  இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில், கீழத்தெருவைச் சேர்ந்த என். நிசார் அகமது (31), கடந்த 2005 -ம் ஆண்டில் மடத்தாச்சியை மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, மடத்தாச்சி நிசாரைத் தாக்கியுள்ளார்.

  இந்த விரோதம் காரணமாக, கடந்த 2005-ம் ஆண்டு ஆக. 22-ம் தேதி நீடூர் இரட்டைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மடத்தாச்சியை,  நிசார் அகமது கட்டையால் தாக்கிக் கொலை செய்தார்.

  பின்னர், மடத்தாச்சி அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, தாலிச் சங்கிலி உள்ளிட்டவைகளை திருடிக் கொண்ட நிசார் அகமது, மடத்தாச்சியின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி, 3 சக்கர சைக்கிளில் ஏற்றிக் கொண்டுச் சென்று கும்பகோணம் அருகேயுள்ள  மணஞ்சேரியில் ஒரு கரும்புத் தோட்டத்தில் வீசி சென்றார்.

  இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நிசார் அகமதுவை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

  வழக்கை விசாரித்த பின்னர், என். நிசார் அகமதுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். சோலைமலை வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

  ஆயுள் தண்டனை பெற்ற என். நிசார் அகமது, ஏற்கெனவே நீடூரில் ஒரு வீட்டுக் காவலாளியைக் கொலை செய்த வழக்கில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆயுள் சிறை தண்டனை பெற்று, தண்டனை அனுபவித்து வருபவராவார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai