Enable Javscript for better performance
லாரி மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் சனிக்கிழமை லாரி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

    சித்தமல்லி அருகேயுள்ள வெள்ளங்குழி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் நீடாமங்கலத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு மொபட்டில் நீடாமங்கலம் - தஞ்சை சாலையில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சுபத்ரா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, லாரி ஓட்டுநர் கொண்டியாறு பகுதியைச் சேர்ந்த தர்மராஜை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai