சுடச்சுட

  

  அதிமுக நிர்வாகியிடம் நூதன முறையில் ரூ. 1.05 லட்சம் திருட்டு

  By நீடாமங்கலம்,  |   Published on : 02nd September 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வலங்கைமான் அருகே சனிக்கிழமை அதிமுக நிர்வாகியிடம் நூதன முறையில் ரூ. 1.05 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  வேப்பந்தாங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (38). இவர் வலங்கைமான் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை செயலராக உள்ளார்.

  இந்நிலையில், சனிக்கிழமை வலங்கைமானில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ. 1.05 லட்சத்தை சங்கர் எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, தொழுவூர் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், சங்கரிடம் சார் உங்களது பணம் கீழே விழுந்துள்ளது என்றனராம். பின்னர், சங்கர் கீழே கிடந்த 3 பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ. 1.05 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

  இதுகுறித்த புகாரின்பேரில், வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai