சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர்.

    தலைஞாயிறு 3-ம் சேத்தியில் ஓரடியம்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் பணிகளை முடித்த கூட்டுறவு சங்கத்தின் செயலர் முருகதாஸ், சனிக்கிழமை மாலை வழக்கம்போல வங்கியை பூட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வங்கியின் அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில்  இருந்தவர்கள் வங்கிக்குச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, பார்த்தபோது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு, நகைகள் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தை மர்ம நபர்கள் திறக்க முயன்றபோது அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து  மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள், இருப்புத் தொகை ரூ. 20 ஆயிரம் உள்ளிட்டவை தப்பியது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai