சுடச்சுட

  

  தரங்கம்பாடி மாசிலாநாதர் கோயில் கும்பாபிஷேகம்

  By பொறையாறு  |   Published on : 02nd September 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள மாசிலாநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கி.பி. 1305 -ம் ஆண்டு மாறவர்மன் குலசேகரப் பாண்டியனால் இந்திய மற்றும் சீன கட்டடக்கலை நுணுக்கங்களுடனும், அழகிய  வேலைப்பாடுகளுடனும் இக்கோயில் தரங்கம்பாடி கடற்கரையோரத்தில்  கட்டப்பட்டது.

  காலப்போக்கில் கடல் அலைகளின் அரிப்பால் சேதம் அடைந்த இக்கோயில் 2004-ம் ஆண்டில் சுனாமியின் தாக்கத்தினால் முழுவதும்  சேதம் அடைந்தது.

  ஆன்மிகவாதிகள் மற்றும் இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது.

  அதன்படி, திருப்பணிக்காக ரூ. 1.5 கோடி நிதியை தமிழக அரசு  ஒதுக்கியது.

  முதல் கட்டமாக கடல் அரிப்பைத் தடுக்கும் வண்ணம் ரூ.64 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சன்னதிகள், சுற்றுச்சுவர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பணிகள் நிறைவடைந்த நிலையில்,  இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது.

  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன.

  ஞாயிற்றுக்கிழமை காலையுடன் நான்குகால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, காலை 10 மணியளவில் அனைத்து சன்னதிகளுக்கும்  கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

  கும்பாபிஷேகத்தில் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் மற்றும் தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏரானமான  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  5 பேரிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு:

  கும்பாபிஷேகத்தின்போது, கூட்டம் அதிகமாக இருந்ததாலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலும் கோயிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் 5 பேரிடமிருந்து தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 10 பவுன் எனக் கூறப்படுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai